இதுவரையான காலப்பகுதியில் மனிதனின் உடலியல் செயற்பாடுகளை ஒத்த ரோபோக்களே உருவாக்கப்பட்டு வந்தன.
அவற்றில் ஏற்பட்ட வெற்றிகளின் அடிப்படையில் தொடர்ந்தும் மனித உணர்ச்சிகளுக்கு நிகராக உணர்சிகளை வெளிப்படுத்தக்கூடிய ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் மூழ்கியுள்ள விஞ்ஞானிகள் தற்போது மனித விரலினை விடவும் உணர்திறன் கூடிய விரல்களைக் கொண்ட ரோபோக்களை உருவாக்கியுள்ளனர்.
தென் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாகவே நியூரோபோட்டிக்ஸ்(Neurorobotics) எனும் இந்த உணர்திறன் கூடிய ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உணரும் வினைத்திறனை அதிகரிப்பதற்காக நவீன தொழில்நுட்பத்தில் அமைந்த விசேட சென்சார்கள் ரோபோக்களின் விரல்களில் பொருத்தப்பட்டுள்ளன.
பரிசோதனை ஒன்றின் போது குறித்த ரோபோக்கள் 117 விதமான பொருட்களில் 95 பொருட்களை சரியாக இனம்காட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.