ளிநொச்சி ஆனையிறவு சிங்கள தமிழ் கலவன் பாடசாலை தற்போது பரந்தன் சிவபுரம் பகுதியில் இயங்கிவருகிறது.
126 மாணவர்களுடனும் 06 ஆசிரியர்களுடனும் இயங்கிவரும் இந்த பாடசாலைக்கு ஒரு நிரந்தர, தற்காலிக கட்டிடங்களோ இல்லை. பாடசாலை அதிபரின் அலுவலகம் கிராமத்தின் பொது நோக்கு மண்டபம் ஒன்றில் இயங்கிவருகிறது.
வகுப்பறைகள் கிராமத்தின் பரந்த வெளிகளிலுள்ள மரங்களின் கீழ் வீசுகின்ற காற்றும் அதனோடு சேர்ந்து வருகின்ற புழுதிக்குள்ளும் அருகில் ஆடு மாடுகள் மேய்ந்துகொண்டிருக்க நடைபெறுகிறது.
சில வேளைகளில் மாணவர்கள் வெறும் தரையில் இருந்தும் கற்கவேண்டிய பரிதாப நிலை தற்செயலாக கால நிலை மாற்றத்தால் மழை பெய்தால் சிறிய பொதுநோக்கு மண்டபத்திற்குள் 126 மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர் எல்லோரும் தஞ்சம் கோரவேண்டும். அன்று கற்பித்தல் இல்லை இப்படியான பரிதாப நிலையில்தான் அந்த பாடசாலை இயங்கிவருகிறது.
அத்தோடு கிராமத்தில் நடைபெறுகின்ற கூட்டங்கள் நிகழ்வுகளுக்கு மண்டபம் பயன்படுத்தப்படுகின்ற போதும் அன்றும் கல்விச்செயற்பாடுகள் இல்லை.
இது இப்படி இருக்க வன்னியில் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் பல கோடிக்கணக்கான ரூபாக்களை செலவு செய்து பல பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில் அவர்களின் பார்வை ஏன் அங்கு கிடைக்கவில்லை அல்லது உரிய அரச அதிகாரிகள் நிறுவனங்களை சிவபுரத்தை நோக்கி இதுவரை ஏன் திருப்பவில்லை.
ஒரு தற்காலிக கொட்டிலை அமைத்துக் கொடுப்பதற்கு கூட ஏன் இற்றைவரை எவரும் சிந்திக்கவில்லை என அப்பிரதேச மக்கள் பல கேள்விகளை கேட்கிறார்கள் இந்த கேள்விகளுக்கு உரிய அதிகாரிகள் எப்பொழுது பதிலளிப்பார்கள்?
அந்த 126 பேரும் மாணவர்கள்தான் சிவபுரத்தில் வசிப்பவர்களும் மக்கள்தான் தயவு செய்து மாவட்டத்தின் அதிகாரிகளே உணர்ந்து கொள்ளுங்கள்.