வட பகுதியில் நாளாந்தம் நடக்கும் சம்பவங்களை நினைக்கும்போது, எங்கள் இனத்தின் வீழ்ச்சியை தடுக்க முடியாதுபோல் தெரிகிறது. அந்தள விற்கு நிலைமை படுமோசமாகி வருகிறது.
உதாரணத்திற்கு நாளாந்தம் எங்கள் மண்ணில் நடக்கும் விபத்துச் சம்பவங்களை எடுத்து நோக்கினால் தமிழ் மக்களின் வாழ்வு எவ்வளவு அபாயகரமானதாக உள்ளது என்பதை உணர முடியும்.
வட பிராந்திய போக்குவரத்து பஸ்க ளை முந்திச் செல்லும் மினிபஸ் சார திகளின் அட்டகாசத்திற்கும் அநியாய த்திற்கும் முடிபே இல்லை என்றாகி விட்டது.
வீதியில் இறங்கினால் என்ன நடக்குமோ என்ற ஏக்கம். அந்தளவிற்கு வீதிப் போக்குவரத்து ஒழுங்குமுறைகள் சீரழிந்து காணப்ப டுகின்றன.மினி பஸ் மோதி குடும்ப ஸ்தர் பலி என்ற செய்தியை யாரும் செய்தியாகப் பார்த்துவிடலாம்.
ஆனால் அதற்குள் இருக்கக்கூடிய இழப்புகள், சம்பந்தப்பட்ட குடும்பம் அனுபவிக்கும் துயரம், எதிர்காலத் தில் அந்தக் குடும்பம் எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கல்கள் பற்றி யாருமே கவலை கொள்வதில்லை.
ஒருபுறத்தில் மினிபஸ் சாரதிகள் போட்டி போட்டு வாகனங்களைச் செலுத்த மறுபுறத்தில் மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசமும் அணியாமல் அதிவேகத்தில் செல்லும் இளைஞர்கள் பற்றி நினைக்கும் போது மழைக்குத்தனிலும் பாடசா லைப் பக்கம் இவர்கள் ஒதுங்கவில்லைப்போலும் என்று எண்ணத் தோன்றுகின்றது.
அந்தளவிற்கு மோட்டார் சைக்கிள்க ளில் வேகமாக பயணிக்கும் இளை ஞர்களின் அறிவு மட்டம் இருப்ப தைக் காணலாம்.
இவைதவிர கையடக்கத் தொலைபேசிக் கலாசாரம் மற்றும் போதைப்பொருள் பாவனை என்பன எங்கள் இளம் பிள்ளைகளின் வாழ்க்கையில் நாசத்தை விளைவித்துவிடும் என்ற அபாயத்தை ஏற்படுத்தி வருகின்றது.
எனினும் இதுவிடயத்தில் பொலி ஸார் நடவடிக்கை எடுப்பதாக அல் லது நடவடிக்கை எடுத்தாலும் அதில் இறுக்கமான போக்கை கடைப்பிடிப்பதாக இல்லை.
எனவே எங்கள் வட பகுதியைத் திருத்த வேண்டுமாயின், அதற்கான ஒரேவழி அந்தந்த நீதிமன் றங்கள் தத்தம் எல்லைக்குட்பட்ட பிர தேசத்தின் அனைத்து விடயங்களி லும் தலையிட வேண்டும்.
எங்கள் வடபகுதியில் இருக்கக்கூடிய நீதிபதிகள் இதுதொடர்பில் தங்கள் சட்ட அதிகாரத்தை பிரயோகிப்பார் களாயின், அவர்களுக்குப் பின்னால் ஒரு பெரும் மக்கள் கூட்டம் செல்வதற்கு தயாராக இருப்பதுடன் எங்கள் மண்ணில் நடக்கும் கலாசாரப் பிறழ்வுகளை நீதிபதிகளுக்கு மட்டும் தெரியப்படுத்த முற்போக்குச் சிந்தனையுடைய இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள்.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரன் விதித்த நிபந்தனைகள் மக்கள் மனங்களில் பாலை வார்த்துள்ளது.
இது போன்ற நிபந்தனைகள் பல விடயங்களில் விதிக்கப்படுமாயின் எங்கள் மண்ணில் சட்டம் ஒழுங்கு கலாசாரப் பேணுகை எழுச்சி பெறும். இது சர்வ நிச்சயம்