எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தப்படும் என ஜே. வி. பி அறிவித்துள்ளது.
மாகாணசபைத் தேர்தலில் கூட்டணி சேரும் திட்டம் கிடையாது என ஜே.வி.பி. பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரச்சினைகளுக்கு பதில் தேடத் தெரியாத அரசாங்கத்திற்கு பாடம் புகட்ட விரும்புகின்றோம்.
அரசாங்கத்திற்கு பாடம் புகட்டும் முயற்சியில் மக்களின் பங்களிப்பு முக்கியமானது. அரசாங்கத்தின் அதிகார தேவைக்காக இந்தத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றது. மாகாணசபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடாத்துமாறு மக்கள் கோரவில்லை.
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாத காரணத்தினால் அரசாங்கம் இவ்வாறு தேர்தலை நடாத்துகின்றது என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.