வானம் சிவக்கிறது
உன் நாணத்தை நினைவுபடுத்தியபடி
கடலலை ஓசையை காற்று அள்ளி வருகிறது
உன் சிரிப்பலையோடு ஒத்திசைகிறது
வானத்தின் கார்முகில் திட்டுக்கள்.
என் கண்ணில்
உன் கூந்தலை கனவாக்குகின்றது
இனி- தோன்றப்போகும் நட்சத்திரம்
உன் விழிகளை ஞாபகப்படுத்தலாம்
நீ இயற்கையோடு இசைகிறாய்
வாழ்வோடு மட்டும்
முரண்படுகிறாய் என்கிறார்கள்
இயற்கை அழகை ஆராதிக்கிறது
சமூகம் என்ன எதிர் பார்க்கிறது.

ந.மணிகரன்
(நாம் கவிதை இதழில் வெளியான கவிதை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *