null-துவாரகன்

துளிர்த்துச் சிலிர்த்துப்
பற்றிப் படர்ந்து
கிட்ட இருக்கும் கிளைகளெல்லாம்
எட்டிப் பிடிக்கின்றன நச்சுக்கொடிகள்.
அன்று முல்லைக்கொடி படரத் தேர் ஈந்தான் பாரி.
இன்று நச்சுக்கொடி படர என்னவெல்லாம் ஈந்தனர்
எங்கள் பாரிகள்.

கொடிசுற்றிப் பிறந்த பிள்ளை
குலத்துக்காகாது என்றே
கோயிலெல்லாம் சுற்றிப்
பிணி நீக்கினாள்
எங்கள் பாட்டி.
வீட்டில் வளர்த்த மாட்டுக்கு குண்டிப்பக்கம் நாகபடம்
உடனே விற்றுவிடு என்றார் அப்பா.

உடம்பெல்லாம் நச்சுக்கொடி படரத் திரியும்
எங்கள் தனயன்மாரை
நாங்கள் யாரிடம் விற்றுத்தீர்ப்பது?

கிழவியைத் துகிலுரிந்து பார்ப்பதும்
குழந்தையைப் பிரித்துக் கிழிப்பதும்
குமரியைச் சிதைத்துக் கொல்வதும்
இன்னும்… அப்பனையும் அண்ணனையும் அடித்துக் கொல்வதும்
எந்தக் குலத்திலையா எங்களுக்குச் சொல்லித்தந்தார்?

நாங்கள் நச்சுக்கொடிகளோடு வாழ்கிறோம்.
இந்த உலகத்தின் அதிமானிடர் என்று சொல்லிக்கொண்டே.
05/2012

4 thoughts on “யாரிடம் விற்றுத்தீர்ப்பது”
  1.  எனது கவிதை பார்த்தேன். பகிர்வுக்கு நன்றி.

    1. உங்களின் கவிதை எமது தளத்தினை மேலும் சிறப்புக்கு உள்ளாக்குகின்றது
      மேலும் தங்களுடைய பல ஆலோசனை எனக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது
      நிச்சயம் நீங்கள் தமிழுக்கு செய்யும் இந்த்தப்பணி புதிய வரலாறுபடைக்கும்.

  2.  உடம்பெல்லாம் நச்சுக்கொடி படரத் திரியும்

    எங்கள் தனயன்மாரை

    நாங்கள் யாரிடம் விற்றுத்தீர்ப்பது?  valvin yathartham .kavithyil soliyerukirerkal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *