யாழ். குடாநாட்டில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
யாழில் மீளக்குடியமர்ந்த மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன.
மீளக்குடியமர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும். அவர்கள் தங்களது செயற்திட்டங்கள் தொடர்பாக தம்மோடு கலந்தாலோசித்து மீளக்குடியமர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயரத்த முன்வர வேண்டும்.
மீளக்குடியமர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.