கட்டிடயாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் கட்டிடங்கள் அமைப்பதற்கான சட்டவிதிகள் தொடர்பான விளக்கும் கருத்தரங்கு இன்று வியாழக்கிழமை யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பிரணவநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாநகர சபை ஆகியவற்றின் பௌதீகத் திட்டமிடல் பிரிவின் உத்திகோகஸ்தர்கள் கலந்துகொண்டு கட்டிடங்களை அமைத்தல், வடிகால்கள் அமைத்தல், நீர் விநியோகம் போன்ற திட்டங்கள் செயற்படுத்தப்படும் போது வரைதல், அனுமதிகள் பெறுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த கருத்தரங்கில் கட்டிட வரைபட கலைஞர்கள், நில அளவையாளர்கள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகஸ்தர்கள், யாழ் மாநகர சபை உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.ங்கள் அமைப்பதற்கான சட்டவிதிகள் தொடர்பான் கருத்தரங்கு