யாழ்ப்பாணத்தில் போதைவஸ்து பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராஜா தெரிவித்தார்.
நிலையம் அமைப்பது தொடர்பாக யாழ். நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, நீதியமைச்சின் செயலாளருக்கு விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவிருக்கின்றது.
இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு நீதி அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா தேசிய போதைவஸ்து கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் திருமதி லெலிசா டி சில்வா சந்திரசேனவிடம் பணித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் போதைவஸ்தின் பாவனை அதிகரித்திருப்பதையும் அது தொடர்பான வழக்கு விபரங்களையும், புள்ளிவிபரங்களையும், அதனால் ஏற்படுகின்ற தீய விளைவுகளையும் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா நீதியமைச்சின் செயலாளருக்கு எடுத்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.