இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்று காதல் திருமணங்களைத் தடைசெய்துள்ளதுடன் பெண்கள் மீது பலவகையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
அசாரா என்ற கிராமத்தின் கவுன்சில் தலைவர்கள், 40 வயதுக்குக் குறைந்த பெண்கள் தனியாக சென்று கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது என்றும் வீட்டுக்கு வெளியே கைத் தொலைபேசிகளைப் பயன்படுத்தக்கூடாது என்றும் தடைவிதித்துள்ளனர்.
தொடர்புடைய விடயங்கள்
துஷ்பிரயோகம், மனித உரிமை
பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கிராமக் கவுன்சில் தலைவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இந்த விவகாரம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்திவருவதாக செய்திகள் கூறுகின்றன.
காதல் திருமணம் புரிபவர்கள் கிராமத்துக்குள் வசிக்க முடியாது என்றும் அசாரா கிராமக் கவுன்சில் அறிவித்துவிட்டது.
இந்தியத் தலைநகர் தில்லியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாக்பாட் மாவட்டத்தில் அசாரா கிராமம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
