பட்டதாரி பயிலுனர்கள் ஆட்சேர்ப்பில் யாழ். உயர் தொழில் நுட்ப பட்டதாரிகள் உள்வாங்கப்படாததை கண்டித்து குருநகர் உயர் தொழில்நுட்ப கல்லூரியில் கலந்துரையாடலுடன் அடையாள போராட்டம் ஒன்றிணையும் இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடத்தினர்.
தென் மாகாணத்தில் உயர் தொழில்நுட்ப கல்லுரி பட்டதாரிகள் – பட்டதாரி பயிலுனர்களாக உள்ளவாங்கப்பட்ட போதிலும், யாழ். மாவட்ட பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க மறுப்பதை எதிர்த்தே இவ் அடையாள போராட்டம் இடம்பெற்றது.
பொது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்ததற்கு அமைய பட்டதாரிகளின் பிரதி நிதிகளுடன் கொழும்பில் கலந்துரையாடப்பட்ட போதிலும், பதில் கிடைக்கப்படாத விடத்து இவ் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடாத்த தீர்மானித்துள்ளனர்.
2004, 2007 வடமாகாண சபையினூடாக பட்டதாரிகள் உள்வாங்கப்பட்ட போதிலும், தமக்கு மறுப்பது ஏன் என்றும் பட்டதாரிகள் தமது கோரிக்கைகளை முன் வைத்தனர்.