யாழ். பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி இன்றைய தினம் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்கலைக்கழக வளவின் பிரதான வீதியில் பந்தல் ஒன்றை அமைந்து நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இவ் உண்ணாவிரதப் போராட்டமானது சுழர்ச்சி முறையில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னரும் யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக பரமேஸ்வரன் ஆலயத்தில் பொங்கல் செய்து சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.