வன்னி யுத்தத்தால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய 12 குடும்பங்களுக்கு நல்லூர் பிரதேச செயலகத்தில் யு.என்.எச்.சி.ஆர் நிறுவனத்தால் 20,000 ரூபாவிற்கான காசோலை இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
இன்று நல்லூர் பிரதேச செயலகத்தில் வைத்து இவர்களுக்கான காசோலைகளும் உணவல்லாத பொருட்களும் வழங்கப்பட்டன.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ள இதுரை எந்தவிதமான கொடுப்பனவுகளும் பெற்றுக்ககொள்ளாத குடும்பங்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட்டள்ளதாக நல்லூர் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்தார்.