இலங்கை அரசசேவை விளையாட்டுச்சங்கம் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய முதன் முறையாக வட மாகாண அரசசேவை மென்பந்து கிரிக்கட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் 5ஆம் திகதிகளில் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.கே.பந்துல ஹரிச்சந்தர தலைமையில் அரச திணைக்களங்களுக்கிடையில் வவுனியா அரச சேவை விளையாட்டுச்சங்கத்தினால் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்ட கிரிக்கட் சுற்றுபபோட்டிக்கான விண்ணப்பங்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்கிளல் உள்ள மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்களுக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் பங்கு பற்ற இருக்கின்ற அரச திணைக்கள அணிகள் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஊடாக கிரிக்கட் போட்டி செயலாளர் மாவட்ட செயலகம் வவுனியா என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கிரிக்கட் போட்டி செயலாளரால் கோரப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களை அறிவதற்கு 024 – 2222233, 024 – 2222234 என்ற தொலைபேசி இலக்க்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.