வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையே இடம்பெற்ற 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவிற்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி வடமாகாண சம்பயினாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
17 வயதுப் பிரிவினருக்கான வலைப்பந்தாட்டப் போட்டி அரியாலை கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.
இப்போட்டி முடிவுகள் தொடர்பில் வட மாகாண கல்வித் திணைக்களத்தின் மாணவர் அபிவிருத்தி உதவிக் கல்விப்பணிப்பாளர் கே.சத்தியபாலன் தெரிவிக்கையில
17 வயதுக்குட்பட்டோர்
முதலாமிடம் வலிகாமம் வலயத்தை சேர்ந்த சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி
இரண்டாமிடம் வலிகாமம் வலயத்தை சேர்ந்த அராலி சரஸ்வதி வித்தியாலயம்
மூன்றாமிடம் வலிகாமம் வலயத்தை சேர்ந்த கொக்குவில் இந்துக் கல்லூரி
15 வயதுக்குட்பட்டோர்
முதலாமிடம் வலிகாமம் வலயத்தை சேர்ந்த அராலி சரஸ்வதி வித்தியாலயம்
இரண்டாமிடம் யாழ் வலயத்தை சேர்ந்த பொன்னாலை வரதராஜப்பெருமாள் வித்தயாலயம்
மூன்றாமிடம் யாழ் வலயத்தை சேர்ந்த யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூதி
19 வயதுக்குட்பட்டோர்
முதலாமிடம் வலிகாமம் வலயத்தை சேர்ந்த யூனியன் கல்லூரி
இரண்டாமிடம் வலிகாமம் வலயத்தை சேர்ந்த இராமநாதன் கல்லூரி
மூன்றாமிடம் வலிகாமம் வலயத்தை சேர்ந்த சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி