அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு துறையின் ஆளில்லா விமானத்தை டெக்சாஸ் பல்கலைகழக மாணவர்கள் கடத்தினர்.
அந்த விமானத்தை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இயக்கிக் கொண்டிருந்த போதே அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விமானத்தை மாணவர்கள் பறித்து, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
டெக்சாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய நவீன தொழில்நுட்பத்தை இந்த வகையில் பரிசோதித்துக் காட்டினர்.
விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டுக் கொண்டு வர மாணவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் மிகவும் கடினமானதல்ல. 1000 டொலர்கள் செலவிட்டால் அதற்கான கருவியை வடிவமைத்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஆளில்லாத விமானத்தைக் கடத்தி நாச வேலையில் ஈடுபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.