விஷால் படத்துக்கு டைட்டில் விட்டுக்கொடுக்க மறுத்தார் இயக்குனர். விஷால் நடிக்கும் படம் ‘சமர். முதலில் இதற்கு ‘சமரன்’ என்று பெயரிடப்பட்டிருந்தது. தலைப்பை மாற்ற¤யது ஏன் என்பதற்கு பட இயக்குனர் திரு கூறியதாவது: எல்லா செயலும் கடவுள் அருளால் நடக்கிறது என்றும், உழைப்பால்தான் நடக்கிறது என்றும் நம்பும் இருவகை எண்ணம் கொண்டவர் உலகில் இருக்கிறார்கள். ஆனால் இதையும் மீறி வேறுவொரு சக்தி ஒரு வாலிபனை வழிநடத்துகிறது. அதற்கு விடை தேடும் கதைதான் சமர். ஹீரோ விஷால். பாங்காக்கில் வசிக்கும் தமிழ் பெண்ணாக த்ரிஷா. மற்றொரு ஹீரோயின் சுனேனா. தாய்லாந்து, பாங்காக் மற்றும் ஊட்டி, மூணாறு, கொடைக்கானல் காட்டு பகுதிகளில் ஷூட்டிங் நடந்துள்ளது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகிறது. யுவன் சங்கர் ராஜா இசை. ரிச்சர்டு ஒளிப்பதிவு.
முதலில் இப்படத்துக்கு ‘சமரன்’ என பெயரிடப்பட்டது. ஆனால் இதே பெயரை மாதவன் உள்ளிட்ட பிரபல நடிகர்களை வைத்து படம் இயக்கிய இயக்குனர் ஒருவர் பதிவு செய்து வைத்திருந்தார். அவரிடம் பலமுறை அணுகி தலைப்பை விட்டுக்கொடுக்கும்படி கேட்டபோது மறுத்துவிட்டார். இதையடுத்து பெயரை மாற்றினோம். ‘சமர்’ என்றால் போர் என்று பொருள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *