எம் நாட்டில் தொடர்ந்த போர் ஏற்படுத்திய அசாதாரண சுழ்நிலைகளால் ஈழத்து தமிழ் இலக்கியத்தில் ஒருதேக்கநிலை காணப்பட்டது தற்போது பல நெருக்கடிகளை கடந்து தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக நூல்கள் அச்சிடப்பட்டு வெளியீட்டு விழாக்களும் நடைபெறுகின்றன
வெளியீட்டு விழாக்களில் அழைக்கப்பட்ட பிரமுகர்களை தவிர
பார்வையாளர்கள் மிகக்குறைவாகவே காணப்படுகின்றனர் அதுவும் விழா முடியும் வரை இவர்கள் பொறுமையாக இருப்பதில்லை
இந்த நிலை நீங்க வேண்டும் தமிழ் இலக்கியஆர்வலர்கள் விழாக்களில் கலந்து கொண்டு ஓருபிரதியாயினும் வாங்கி ஊக்குவிக்க வேண்டும் அப்போதே தமிழ் இலக்கியத்துறை வளம் பெறும்..
வேலணையூர்-தாஸ்

Good