நீல ஆடை போர்த்தி வரும்
வானத்தின் அழகில் தொலைந்து
விடுறேன்.
கார்முகிலாள் கொண்டு
வரும் கரு முகிலிலுள்ளும்
தொலைந்து விடுகிறேன்.
சுட்டெரிக்கும்
சூரியனின்
அழகை ரசிக்கையிலும்
தொலைந்து விடுகிறேன்
அந்த நீலக்கடலின்
அலைகள் தவழ்கையிலும்
தொலைந்து விடுகிறேன்.
பொட்டு,பொட்டாய்
விண்மீன்கள் போடும்
கோலத்தின் அழகை
ரசிக்கையிலும் தொலைந்து
விடுகிறேன்.
தோகை விரித்தாடும்
மயிலின் ஆட்டத்திலும்
தொலைந்து விடுகிறேன்.
வண்ண வண்ணமாய்
பூத்திருக்கும் ரோஜாவின்
நறுமணத்திலும் நான்
தொலைந்துவிடுகிறேன்.
மொத்தத்தில் அமாவாசை
இருள் கிளித்து தமிழர் நம்
வாழ்வு பௌர்ணமி ஆகும்
போது இயற்கையே உன்னிடம்
முழுவதுமாய் தொலைந்துவிடுவேன்.
by-யாயினி