Month: June 2012

சீனா பெண்ணொருவர் விண்வெளிக்கு பயணம்.

பெண்ணொருவர் உட்பட 3 விண்வெளி வீரர்களைக்கொண்ட விண்ஓடமொன்றை சீனா இன்று விண்வெளிக்கு ஏவியது. ஷென்ஸோ-9 எனும் இவ்விண்கலம் கோபி பாலைவனத்திற்கு அருகிலுள்ள ஜியூகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டது. 33 வயதான லியூ யாங் என்பவரே சீன விண்வெளி ஓடமொன்றின் மூலம் விண்வெளிக்குச்…

யாழில்மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாக அரசஅதிபர்

யாழ். குடாநாட்டில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழில் மீளக்குடியமர்ந்த மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன.…

யாழ் உதயபுரம் பகுதியில் உரிமையாளரில்லாமல் படகு!

யாழ்.குடாக்கடல் பகுதியான மணியம் தோட்டம், உதயபுரம் பகுதியில் இன்று புதன்கிழமை கரையொதுங்கிய கண்ணாடி இழைநார் படகினை உரியவர்கள் தகுந்த ஆதராங்களை காட்டி பெற்றுக்கொள்ளுமாறு யாழ்.பிராந்திய நீரியல் வள திணைக்கள பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்தார். கடல் காற்றுக் காரணமாக கிளிநொச்சிப் பகுதி மீனவருடைய…

இஸ்சட் புள்ளி குறித்து கல்வி அமைச்சர்.

இஸட் புள்ளி கணித்தலுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே பொறுப்பு எனவும் கல்வி அமைச்சருக்கும் பரீட்சைகள் ஆணையாளருக்கும் இது தொடர்பான எந்த விவகாரத்திற்கும் பொறுப்பல்ல எனவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

மொபிடல் பாரிய வலையமைப்பினை விஸ்தரித்துள்ளது.

இலங்கை தேசிய மொபைல் சேவை வழங்குநரான மொபிடெல் இலங்கையில் தகவல் தொழில்நுட்ப மாற்றம் உருவாக்க உறுதி பூண்டுள்ளது. தற்போது மொபைல் ஊடாக பேசுதல் மற்றும் குறுந்தகவல் அனுப்புதல் மாத்திரம் இன்றி அவற்றைவிட பல்வேறு விடயங்களுக்கு மனித வாழ்க்கையில் இக்கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்தப்படுகின்றமை…

8மாத சிசுவின் கைகளை பதம் பார்த்த பாட்டி

தனது பாட்டியால் கைகள் இரண்டும் வெட்டப்பட்ட நிலையில் 8 மாத குழந்தையொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் சாங்டோங் மாகாணத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி பெண் குழந்தையை பாட்டியின் பராமரிப்பில் விட்டு அதன் பெற்றோர் தொழிலுக்குச் சென்றவேளை இச்சம்பவம்…

முத்தரப்பு டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது ஜிம்பாப்வே

முத்தரப்பு டி20 தொடரின் இறுதிச் சுற்றில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய ஜிம்பாப்வே அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகள் மோதிய முத்தரப்பு டி20 தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்றது. லீக் சுற்றின் முடிவில் மூன்று அணிகளுமே…

பயஸுற்காக என்னை தூண்டிலாக்கி விட்டனர்: சானியா

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயசுடன் இணைந்து விளையாட மகேஷ்பூபதி, ரோகன் போபண்ணா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2012ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் இம்முறை லண்டனில் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர்களின் மோதலால் ஒலிம்பிக்…

பாதுக்காப்பு பணியில் உள்ளவரின் கைவரிசை!

மட்டக்களப்பு புகையிரத வீதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ வீரர் ஒருவர் உட்பட இருவரை வெலிகந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. நேற்று நண்பகல் நகைக் கடைக்குச் சென்று…

ஸ்ரீலங்கா பிறீமியர் லீக் புதிய வரலாறு படைக்குமா!

ஸ்ரீலங்கா பிறீமியர் லீக் அணிகளுக்கான ஏலத்திற்கு சிறந்த வரவேற்புக் கிடைத்துள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பிரபலமடைந்த இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகளையடுத்து, இலங்கையிலும் இம்முறை ஸ்ரீலங்கா பிறீமியர் லீக் போட்டிகள் (எஸ்.எல்.பி.எல்) தொடங்க உள்ளன. இத்தொடரில் 7…