Month: July 2012

இலங்கை – பாக். 2 ஆவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவு

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவுற்றுள்ளது. கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்இழப்பிற்கு 551 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. போட்டியின் இறுதிநாளான இன்று புதன்கிழமை,…

உலக T20 இந்திய அணியின் சகலதுறை வீரர் யுவ்ராஜ் விளையாடுவாரா?

இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் இடம்பெறவுள்ள சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடருக்கான அணியில் இந்திய அணியின் சகலதுறை வீரர் யுவ்ராஜ் சிங் இடம்பெற வேண்டும் என எதிர்பார்ப்பதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் பிரதம தேர்வாளர் க்ரிஷ் ஸ்ரீகாந்த்…

பாடு மீன்களின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டியில் வின்சன்ற் மகளிர் பாடசாலை சம்பியன்

பாடசாலைகளுக்கிடையிலான பாடுமீன்களின் சமர் எனும் வருடாந்த கிரிக்கட் போட்டியில் (பிக் மெச்) வின்சன்ற் மகளிர் தேசியப்பாடசாலை இவ்வருடம் சம்பியனாகியுள்ளது. லயன்ஸ் கழகத்தின் பிரதான அனுசரணையுடன் இன்று புதன்கிழமை வெபர் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. 20 ஓவர் கொண்ட இப் போட்டியில், சிசிலியா…

கல் மனம் படைத்த தாயின் செயல் யாழ். போதனா வைத்தியசாலை மலசலகூடக் குழாயிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மலசலகூடக் குழாயிலிருந்து குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட சிசுவொன்றின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அடைப்பு ஏற்பட்டிருந்த இம்மலசலகூடக் குழாயை துப்பரவு செய்துகொண்டிருந்தபோது குழாயிலிருந்து அழுகிய நிலையில் இச்சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக யாழ். பொலிஸார் இன்று புதன்கிழமை…

யாழ். பல்கலையின் கலைப் பீட பீடாதிபதியாக பேராசிரியர் வி.பி.சிவநாதன் நியமனம்

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப் பீட பீடாதிபதியாக பேராசிரியர் வி.பீ.சிவநாதன் இன்று புதன்கிழமை பதவியேற்றுள்ளதாக யாழ். பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பீடாதிபதி தெரிவு வாக்கெடுப்பில் போட்டி எதுவுமின்றி பொருளியல் துறை பேராசிரியரான சிவநாதன் பீடாதிபியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். யாழ்.…

யாழ். போதனா வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு(யாழ்ப்பாண வைத்திய பணிப்பாளர்)

யாழ். போதனா வைத்தியசாலைக்கு வடக்கு, கிழக்கு சமுதாய மீள் அபிவிருத்தித் திட்டத்தின் (நிக்கோட்) கீழ் 10 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் இன்று புதன்கிழமை வழங்கப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவத் தேவைகளுக்காக இவ் வைத்திய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும்…

திருமணம் செய்வதாக ஏமாற்றிய யாழ் பெண்! நீதிமன்றம் அழைப்பாணை

இத்தகைய பெண்களால் யாழ்ப்பாணம் எனும் பாரம்பரிய நம் பூமிக்கு கலங்கம் ஏற்பட்டுவருகின்றது இதை தடுக்கவும் யாழ் பெண்களின் கலங்கம் துடைக்கவும் பெண்கள் அமைப்புக்கள் முன்வரவேண்டும் அத்தகைய செயற்பாட்டிற்கு நமது “பாருங்கோ” வலைத்தளம் களம் அமைத்துதரும்.இத்தகைய செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் நடக்கமாலிருக்க வேண்டும்…

யாழில் கட்டிடங்கள் அமைப்பதற்கான சட்டவிதிகள் தொடர்பான் கருத்தரங்கு

கட்டிடயாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் கட்டிடங்கள் அமைப்பதற்கான சட்டவிதிகள் தொடர்பான விளக்கும் கருத்தரங்கு இன்று வியாழக்கிழமை யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பிரணவநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் நகர அபிவிருத்தி அதிகார சபை…

ஆரம்பகல்விச் செயற்பாடுகள் -2012

செயலமர்வு. மேற்படி செயலமர்வு06-07-2012 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 2.30 மணிவரை யா-கோப்பாய் நாவலர் வித்தியாலயத்திலும்.யா- இந்துக்கல்லூரியிலும் நடைபெறும்.

‘நாம்’ கவிதை இதழ்-ஓர் இரசனைக்குறிப்பு

சமூகமேம்பாட்டில் கவிதை நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காலத்திற்கு காலம்; தோற்றம் பெற்ற கவிஞர்கள் பலர் தமது கவிகளினூடாக சமூகத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளனர். அத்தகைய சிறப்புமிகு கவிதை நூல்களின் வரிசையில் அண்மையில் வெளிவந்திருக்கும் நாம் கவிதை இதழும் சமூகத்தின் எழுச்சிக்கு வித்திடும்…