கொலம்பியா நாட்டில் தலைநகர் போகோதாவுக்கு 180 கிலோ மீற்றர் தொலைவில் ஆன்டியன் மலைத்தொடரில் நிவாடோ டெல் என்ற எரிமலை அமைந்துள்ளது.
இந்த எரிமலை கடந்த 1985ஆம் ஆண்டு குமுறி அக்கினியை கக்கியதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். சுமார் 5 ஆயிரம் பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.
தற்போது இந்த எரிமலை மீண்டும் குமுற தொடங்கியுள்ளது. அதில் இருந்து புகையும், சாம்பலும் வெளிவருகிறது.
இதனால் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 4,800 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
இது குறித்து ஜனாதிபதி ஜுயன் மானுவேல் சந்தோஷ் வெளியிட்ட அறிக்கையில், இது அபாயகர பகுதியாகும். எனவே அங்கு வசிக்கும் மக்கள் உடனே வெளியேற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.