தனது பாட்டியால் கைகள் இரண்டும் வெட்டப்பட்ட நிலையில் 8 மாத குழந்தையொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் சாங்டோங் மாகாணத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி பெண் குழந்தையை பாட்டியின் பராமரிப்பில் விட்டு அதன் பெற்றோர் தொழிலுக்குச் சென்றவேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தின் பின்னர் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி கோமா நிலையில் உள்ளார். அதனால் அவரின் நோக்கத்தை அறிந்திருக்கவில்லை.
நண்பகல் வேளையில் தொழிலுக்குச் சென்று வீடு திரும்பிய தாய் குழந்தையை இரத்த வெள்ளத்தில் தோய்ந்திருந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்வதை கண்டதாக அயலவரொருவர் தெரிவித்துள்ளார்.
வெட்டப்பட்ட குழந்தையின் கைகளை எடுத்துவருமாறு குழந்தையின் தாய் தனது கணவரிடம் கூறினார்.
குழந்தையின் கைகள் எனது தாயினால் வெட்டப்பட்டு விட்டன. அவரும் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்கள் 12 மணித்தியால சத்திர சிகிச்சையின் மூலம் மேற்படி குழந்தையின் கைகளை மீளிணைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இம்முயற்சி வெற்றிபெற்றால் அதன்பின்னரும் அக்குழந்தை பல சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட வேண்டியிருக்கும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.