இலங்கை தேசிய மொபைல் சேவை வழங்குநரான மொபிடெல் இலங்கையில் தகவல் தொழில்நுட்ப மாற்றம் உருவாக்க உறுதி பூண்டுள்ளது. தற்போது மொபைல் ஊடாக பேசுதல் மற்றும் குறுந்தகவல் அனுப்புதல் மாத்திரம் இன்றி அவற்றைவிட பல்வேறு விடயங்களுக்கு மனித வாழ்க்கையில் இக்கையடக்கத் தொலைபேசிகள் பயன்படுத்தப்படுகின்றமை அதன் முதிர்ச்சியை குறிக்கின்றது. அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்றடிப்படையில் இலங்கையும் மக்கள் தேவைக்கமைய இப்போக்கில் பங்காளியாக இருப்பதையிட்டு நாம் பெருமையடைகிறோம். இச்சூழலை மூலோபயமாக கொண்டு இலங்கையின் தேசிய மொபைல் சேவை வழங்குநரான மொபிடெல் நாடு முழுவதும் உள்ள தமது சேவை தளநிலையங்கள் மூலம் தகவல் தொடர்பாடல் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த ஊறுதிபூண்டுள்ளது.
இங்கு கருத்து தெரிவித்த மொபிடெல் பிரதான நிறைவேற்று அதிகாரி லலித் டி.சில்வா – ‘உலகதரம் வாய்ந்த தொழில்நுட்பத்தினை கொண்ட மிகச் சிறந்த சேவையினை வழங்குவது எமது தலையாய கடமையாகும். இதன் முலமாக இலங்கையை ஆசியாவின் தகவல் தொடர்பாடல் துறையில் கேந்திர நிலையமாக மாற்றும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு உறுதுணையாக நாம் எதிர் பார்க்கின்றோம். அதற்கமைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதேசங்களில் எமது 2G, 3G தளநிலையங்களை மிக குறுகிய காலப்பகுதியில் விரிவாக்கம் செய்துள்ளோம் என்பதை பெருமையுடன் அறியத்தருகின்றோம். உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் எமது சேவைகளை யாழ். குடாநாட்டிலும் விஸ்தரித்துள்ள மொபிடெல் வட, கிழக்கு மாகாணங்களுக்கும் தமது சேவையை விஸ்தரித்துள்ளது. நாம் தற்போது சிறந்த திறன் மற்றும் வேகமான இணைய வசதியை வழங்குகிறோம்..’
மொபிடெல் நிறுவனத்தின் சிரேஷ்ட பொது முகாமையாளர் ரசன்த ஹெட்டிதான்திரிகே கருத்து கூறுகையில்… “எமது பொறியியல் மற்றும் நடவடிக்கை தரங்கள் மிகவும் சிறந்த தரத்தில் உள்ளன. அவை எந்த சவாலுக்கும் எற்றவாறு முகங்கொடுக்க கூடியவை. எமது விரிவாக்கற் திட்டம் 70 துணை நிறுவனங்களையும், 200 பொறியியளாலர்களையும், 1500 இற்கு மேற்பட்ட திறன் வாய்ந்த தொழிலாளர்களையும் கொண்டது. மொபிடெல் ஏற்கனவே வருங்கால தலைமுறை அபிவிருத்தியை எட்டியுள்ளது. இது மொபிடெல்லின் ஆற்றலுக்கான சாதனையாகும். உற்பத்தியாற்றல், சிக்கனம், பாதுகாப்பு மற்றும் சுமுகமான தொழில் சூழல் என்பவற்றில் நாம் கவனம் செலுத்துகிறோம். மொபிடெல் மேற்கொள்ளும் அபிவிருத்திகள் நாட்டின் அபிருத்தியிற்கு என்றும் துணை செய்யும்” என தெரிவித்தார். மேலும் இங்கு கருத்து தெரிவித்த அவர் “உண்மையாக எமது இத்திட்டத்தை செயற்படுத்தும் முன்னர் நாம் 3 காரணங்களை குறித்து ஆராய்ந்தோம். அவையாவன பலன் மற்றும் முதலீட்டுக்கு தக்க பிரதிபலன், பாதுகாப்பு மற்றும் சாதகமான சூழல் என்பனவாகும். இக் காரணிகளை கொண்டு உச்சப்பயனை பெற்று அதன் நன்மையை எமது பங்காளரிடையே பகிர்ந்தளிப்பதே எமது நோக்கமாகும்..”.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த மொபிடெல் நிறுவன செயற்றிட்ட மற்றும் வலையமைப்பு பொது முகாமையாளர் சந்தன குணசேகர… “தளநிலையங்களும் அனைத்து LTE 4G மொபைல் தொழில்நுட்பத்தை சார்ந்ததாகும். இது எதிர்காலத்தில் மொபைல் பிரோட்பாண்ட் தொழில் நுட்பத்தில் முன்னணியில் திகழப்போகும் சேவையாகும். நவீன உலகில் வேகமான தொடர்பாடல் இன்றியமையாத ஒரு காரணியாகும். இதற்கமைய எமது அனைத்து சேவை தளநிலையங்களும் LTE தொழிநுட்பத்தை கொண்டிருக்கும். முன்னொருபோதும் பெற்றுக் கொள்ளப்படாத இணைய பாவனை பெற இதுவே காரணமாகும். இந்த செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக 4G மற்றும் LTE பற்றிய அறிவினை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதோடு இச்சேவையை தெற்காசியாவில் முதன் முதலாக வழங்குதில் பெருமையடைகின்றோம். இதற்கமைய எமது அனைத்து சேவை மத்திய நிலையங்களும் நாடுபூராகவுமுள்ள SLT ஃபய்பர் நெட்வர்க் ஊடாக இணைந்துள்ளதுடன் உயர் நம்பிக்கை மிகச்சிறந்த திறன் கொண்ட வலையமைப்பிற்க்கு வழிவகுக்கும்” என கூறினார்.
தொழில்நுட்ப வளர்ச்சிகள் அதிகரிக்கும் போது தேசத்திற்கு பயன் அளிக்கும் பல உற்கட்டமைப்பு அபிவிருத்திகளும் ஏற்படும். தேசத்தினை புதிய யுகம் ஒன்றினை நோக்கி கொண்டு செல்லும் அரசாங்கத்தின் பயணத்தில் என்றும் மொபிடெல் பெரும் துணையாக இருக்கும்.