அனைவகுக்கும் வணக்கம்…..!!!!!!!!!!
சேர்க்கைகளின் தொடர் வாசகர்கள் நான் இடும்  “சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே……” என்ற தொடரினைப்பற்றி நன்றாகத் தெரிந்திருப்பீர்கள். 
எந்தவொரு யாழ்ப்பாணத்தவனும் தன் மனதில் அடையும் வேதனைகளையும், என் நண்பர்களுடைய மனதின் ஆழக்கருத்துக்களையும் கருத்தில் கொண்டு இந்த இடுக்கைகளை எழுதிவருகின்றேன்.
ஆனால், இந்த இடுக்கைகளை ஒரு கேலிக்குரியதாக மாற்றுவதற்கு சில மனித மனத்தினையும் உணர்வினையும்  மதிக்கத்தெரியாத ஆறறிவு ஜீவன்கள் மன்னிக்கவும் ஆறறிவு ஜீவிலிகள் முனைப்பெடுத்து வருகின்றன.
அவை தாம் வேறு மொழி பேசுபவன் அல்ல தாமும் தமிழன் தான் என சொல்லாமல் சொல்லிவருகின்றன. தமிழ்ராகிய நாம் விடும் பெரிய பிழை நாமும் ஒன்றும் செய்யமாட்டோம்… செய்பவனையும் சரிவர செய்யவிடமாட்டோம்.. இது ஆண்டாண்டுகாலமாக எம் கலாச்சாரமாகவே மாறிவிட்டது. 
நான்  நினைக்கிறேன் நாம் தமிழர் என்பதற்குரிய, எம்மை மற்றவர்களிடம் இருந்து வகைப்படுத்திக் காட்டுவதுவதற்குரிய விக்ஷேட சிறப்பியல்பு இதுவோ தெரியாது.. காரணம் அனைத்து ஜீவராசிகளையும் பிரித்துக் காட்டுவதற்கு ஒவ்வோர் சிறப்பியல்பு இருக்கும். அது போல தமிழனை தனித்துவப்படுத்திக் காட்டுவதும் இந்த இயல்போ என்று நினைக்கத் தோன்றுகிறது.
“சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே……” 
 நான் எழுதும் இந்த விமர்சனத்தை சிலர் அரசியல் ஆக்கப் பார்க்கின்றனர். சிலர் அதை கேவலப்படுத்துகின்றனர். அவர்களுக்கு இன்னும் விளங்கவில்லை இந்த பதிவின் நோக்கங்கள்.
ஓர் நோய்வாய்ப்பட்டிருக்கும் தாயை எப்படியாவது காப்பாற்றி ஆக வேண்டும் என்று ஒரு பிள்ளை துடிக்கிறது. ஆனால் அந்த தாயின் ஏனைய பிள்ளைகள் தூரத்தே நின்று வேடிக்கை பார்த்து  தமக்கு சம்மந்தம் இல்லாத விடயமாக நினைத்து விமர்சித்துவிட்டுச் செல்கின்றது. 
இதுவே நான் எழுதும் இந்த பதிவிற்கும் நிகழ்கிறது. ஒருவனின் உணர்வினை மதிக்கத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. தயவு செய்து அதை கேவலமாக விமர்சிக்காதீர்கள்.
உங்களுக்கு ஒன்று கூறிக்கொள்ளவிரும்புகிறேன்!!!!!!!
என்னுடைய பதிவுகள் அரசியல் நோக்கத்திற்காகவோ… என்னுடைய முகவரிக்காகவோ…. என்னுடைய தனிப்பட்ட ஆதாயத்திற்காகவோ எழுதப்படவில்லை….
உணர்வுள்ள ஒருவனும் தன் மனதிற்குள் நினைப்பதை நான் எழுத்துரு கொடுக்கின்றேன்.. அவ்வளவு தான்.  தயவு செய்து இதை அரசியல் ஆக்காதீர்கள்.
             “ நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்”
பதிவகள் தொடரும்…………
                                           ******நன்றி********
மற்றவர்களின் உணர்வினை மதிக்கின்ற உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *