அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
இன்று அந்நிய செலவாணி பரிமாற்றங்களின் போது அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு 134 ரூபாவாக வீழ்ச்சியடைந்தது. கடந்த 12ஆம்திகதி டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு 133.60 ரூபாவாக விற்கப்பட்டதே ஆகக்குறைந்த நாணய மதிப்பாக இருந்தது.
இந்தநிலையில் இலங்கை நாணயப் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்து, டொலர் ஒன்று 134 ரூபாவாக விற்கப்பட்டது. கடந்த ஆண்டு நவெம்பர் மாதத்துக்குப் பின்னர் இலங்கை ரூபாவின் மதிப்பு 18 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.