அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது வண்க்கம்..
யாழ்ப்பாணதின் பெயரினைச்சொல்லி(அதாவது தன் தாயின் பெயரைச் சொல்லி..) பணம் சம்பாதிக்க ஒருவர்(புலம் பெயர் தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் ஓர் ஜந்து..) ஓர் இணையத்தளத்தினை பயன்படுத்தி வருகிறார். அவரின் சமூக அக்கறை அளவுகடந்து செல்கின்றது. அவரின் சமூக அக்கறையும் நகைச்சுவை உணர்வும் அனைவரையும் கவர்ந்துள்ளது போலும். ஏனெனில் அவரின் தளத்தினை ஒரு சமூகத்தளத்தில் விரும்பியுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9,732. என்னைப் பொறுத்தவரை இவர் இந்தியா சென்றால் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவைப் பகுதியினை நன்றாக எழுதுவார் என நினைக்கிறேன். (காமத் தலைப்புகளில்…தப்பா நினைக்காதீங்க அதைவிட்டா அவருக்கு வேற வராது..) 
அந்த ஜந்து தனது தளத்தில் போட்டுள்ள இடுக்கைகளின் பட்டியலை உங்கள் பார்வைக்குத் தருகின்றேன்..
  • யாழ்ப்பாணப் பேருந்தில் இளம் பெண்ணை தன் உடம்பால் அயன் பண்ணும் கிழடு( இது சேர்க்கைகளில் விரிவாக ஆராயப்பட்டது.)
  • விபச்சாரிகளாக மாறும் எங்கள் தங்கைகள்
  • ஒரு காதலனுக்காக இரு பிரபல பாடசாலை மாணவர்கள் கட்டிப் புரண்டு சண்டை
  • யாழ்ப்பாணத்தில் தனியார் பஸ்களில்..( இது இங்கு ஆராயப்பட உள்ளது..)
  • அநேகமான தலைப்புக்கள் இங்கே தர முடியாதவையாக உள்ளன…( அவரின் வார்த்தை பிரயோகங்கள் அவர் வளர்ந்தவிதத்தை காட்டுகிறது)

 “நான் தான் யாழ்ப்பாணத்தின் சமூக நலனில் அக்கறை கொண்டவன். என்னால் தான் இந்த சமூகத்தினை திருத்த முடியும். மற்றவர்கள் எல்லாம் வீண். ஏனெனில் நான் தான் இருட்டில் நடக்கும் விடயங்களை திரைபோட்டு எனது தளங்களில் உலாவவிகின்றேன். அது நூறு நாட்களைத் தாண்டியும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. என் விசுவாசிகள் (9,731..முன்பு குறிப்பிட்டதனை விட 1 குறைந்துள்ளது.. நான் இப்பதிவினை எழுதிக் கொண்டிருக்கும் போது..) இருக்கும் வரை என்னை அசைக்க முடியாது.”

இப்படியானவரகள் இருக்கும் வரை என்னால் என்ன செய்யமுடியும். அண்மையில் எனது இடுகையினைப்(சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே……(பாகம் 2)) பார்தத ஒரு நண்பர் எதேர்ச்சியாக ஒருவருடன் ஃபேஸ்புக் அரட்டையில் ஈடுபட்டுள்ளார். அந்த நபர் நான் குத்திக்காடும் இணையத்தள நிருவனரின் நெருங்கிய நண்பர். அவரும்  என் இடுகையினை வாசித்துள்ளார். அவருக்கும் என் நண்பருக்கும் இடையில் காரசாரமான அரட்டை, அப்போது அவர் கூறியுள்ளார்: நான் பல தடவை அவரிடம்( இணையத்தள நிருவனரிடம்) கூறியுள்ளேன் ஆனால் அவர் கேட்பதாக இல்லை என்றார்.(அப்படியாயின் அவர் சமூக சீர்திருத்தவாதி என்று கூறிக்கொண்டு சமூகத்தை சீரழிக்கிறாரா???) அப்படி கூறியதுடன் அவர் அந்த தளத்தினை விட்டுவிலகினார். (ஃபேஸ்புக் like இல் இருந்து..).

இது நான் இடும் இடுக்கைக்கு கிடைத்துள்ள முதல் வெற்றியாகவே கருதுகின்றேன். அத்துடன் என் நண்பர்களும் எனது பதிவினைப் பிரசுரித்து பல்வேறு விதமாக மக்களை சென்றடைய வைக்கின்றனர். இக் கணம் எனது மனமார்ந்த நன்றியையும் அவர்களுக்கு தெரிவிக்கின்றேன். இந்த இடுக்கைகளுக் எனக்கு எதிர்ப்புகளும் வந்துள்ளன.(ஆனால் அவர்களும் உண்மை புலப்பட மனம்மாறுவார்கள் என்றென்னுகிறேன்.)

சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே……(பாகம் 3) 
இன் இன்றைய தலைப்பை ஆராய்வோம்….
அவரின் நகைச்சுவையின் தலைப்பு யாழ்ப்பாணத்தில் தனியார் பஸ்களில்….
அப்படி என்ன யாழ்ப்பாணத்தில் தனியார் பஸ்களில் நடக்கிறது… நாமும் ஒருக்கால் போய்ப்பாப்பம் என்று போனேன். 
 “முதலில் இ.போ.ச க்கு(இலங்கைப் போக்குவரத்து சபை) சொந்தமான பஸ்ல போவம் எண்டு நினைச்சுதான் போனன். ஏனென்டால் அது பெருசும் வடிவா நிண்டும் போகலாம்.( மினிவான்ல போனா குனிஞ்சு நிக்கனும்.. அது பரவாயில்லை இப்ப யாரோ ஒருத்தன் எங்கட சனம் நிக்கிறது, இருகிறது, படுக்கிறது எல்லாத்தையும் படமெடுத்து போடுறானாம்!!! ஏதோ கலாச்சாரம் கெட்டுப்போகும் என்ற பெயரில.. சின்ன பெடியல் பற், விக்கட்டோடயும் நிக்க வழியில்லயாம்!!!!!  காலாற தெரிஞ்ச பெடியன் வீட்டு கேட்டிலயும் நிக்க விடுறானில்லயாம்!!!!! உடன அதுகல படம் எடுத்து யாழ்ப்பாணக் கலாசாரம் கெட்டுபோச்சு என்றானாம்… நான் ஒன்டு கேக்கிறன் உங்களிட்ட அவனுக்கு மண்டேல ஏதாச்சும் பலமா அடிபட்டு போச்சுதுபோலகிடக்கு… பிறகு அதையும் படம் பிடிச்சிட்டானெண்டா..) நானும் பஸ்ஸ பாத்துக் கொண்டு நிக்கிறன்.. தெரிஞ்ச பெடியல் எல்லாம் மினிபஸ்ல இருந்து கைகாட்டிக் கொண்டு போறாங்கள். கன நேரமா நிண்டாச்சு.. பஸ்ஸ கானல , கைகாட்டிட்டு போனவனெல்லாம் திரும்பி போறான்.. நானும் பார்த்து பார்த்து களைச்சுப் போய் வீட்ட போனதுதான் மிச்சம்.  அதுக்கு பிறகு இ.போ.சாவ பாக்கிறதே இல்ல. என்ன நடந்தாலும் மினிவான் தான்..” 
யாழ்ப்பாண போக்குவரத்து லட்சணம் எல்லோரும் அறிந்ததே. அந்த முட்டாள் தனது பதிவில் குறிப்பிட்டது போல் யாழ்ப்பாணத்தில் அதிகளவான மோட்டார் வண்டிகளும் துவிச்சக்கர வண்டிகளும் உள்ளன. அதற்கு என்னசெய்ய சொல்றார்… 
யாழ் நகரில் இருந்து சுமார் 7 அல்லது 10 கி.மீ தூரத்தில் உள்ளவர்கள் அவர் குறிப்பிட்டதுபோல் வருவதில் நிஜாயம் இருக்கு. அதுக்காக காரைநகர், பளை, சாவகச்சேரி, தெல்லிப்பளை, வடமராட்சிப் பகுதி மற்றும் வேறு இடங்களில் இருந்து வருபவர்கள் என்ன செய்வது??? 
சமூக அக்கறை கொண்டவன் தானே நீ????  
நீயும் உன் வாலுகளும் சேர்ந்து யாழ்ப்பாணத்திற்கு சிறந்த ஓர் போக்குவரத்து வழியினை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே. அல்லது  உரியவர்களின் கவனத்திற்கு ஓர் மணுவினை அனுப்ப வேண்டியது தானே….பிறகு உனக்கு எதற்கு உந்த தேவையில்ல துளவாரங்கள் எல்லாம்..
நீ உன்னுடைய இணையத்தளம் எப்போது முளைத்தது.?? 
அப்படியாயின் யாழ்ப்பாணத்தில் காலம்காலமாக இயக்கிவரும் பத்திரிகை நிருபர்கள் என்ன முட்டாள்களா?? உனக்கே இப்படியான தகவல்கள் கிடைக்கும் போது அவர்களுக்கு கிடைக்காதா என்ன??? உன்னைப் போல அவர்களுக்கு செய்திகள் போடத்தெரியாதா என்ன??? அவர்கள் ஏன் போடவில்லை??? சற்றே சிந்திக்கத் தெரியாதா??? மூடனே!!!!!!!!! 
என் பதிவில் உனக்கு அடிக்கடி ஒரு விடயத்தை ஞாபகப்படுத்தி வருகின்றேன். நீ வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாக போடும் ஒவ்வோர் பதிவும் புதிய தவறுகளைத்தூண்ட வைக்கும் என்பதில் ஐயமில்லை..
தயவு செய்து நீ உன் இடத்திற்கு நன்மை செய்யவிரும்பின் இப்படியான இடுக்கைகள் போடுவதை நிறுத்திக் கொள்!!!! 
இது உனக்கு விடுக்கும் எச்சரிக்கை!!!!!!!!!!!!
இவனுக்கு எதிராக இந்தியாவிலுள்ள எனது நண்பன் எழுதிய பதிவு உங்கள் பார்வைக்கு.. 

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *