அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆதி பகவன்’. இதில் முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இவற்றில் ஒன்று திருநங்கை வேடமாம். ஆதி பகவனில் ஜெயம் ரவியின் வித்தியாசமான நடிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் படக்குழுவினர். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நீத்து சந்திரா நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
