காலேயில் நடைபெற்ற இலங்கைக்கெதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தங்களுக்கு எதிராக மோசமான தீர்ப்புகள் வழங்கப்பட்டதாக பாகிஸ்தான் அணி நிர்வாகம் புகார் எழுப்பியுள்ளது.
நடுவர் தீர்ப்பு மேல்முறையீட்டுத் திட்டத்தை அனைத்து டெஸ்ட் போட்டிகளுக்கும் கட்டாயமாக்குவதற்கு எதிரான முடிவை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) எடுத்த தருணத்தில் பாகிஸ்தான் புகார் அங்கு சென்றுள்ளது.
டெஸ்ட் முடிந்தவுடன் காலேயிலிருந்து பாகிஸ்தான் பயிற்சியாளர் டேவ் வாட்மோர், அணி நிர்வாகி சீமா ஆகியோர் ஆட்ட நடுவர் டேவிட் பூனிடம் புகார் அளித்துள்ளனர்.
காலே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் இயன் கோல்ட், அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் டேவிஸ் ஆகியோர் குறைந்தது 10 அல்லது 12 மோசமான தீர்ப்புகளை வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.
ஓரிரண்டு தீர்ப்புகள் மோசமாக அமைந்தால் விட்டு விடலாம் ஆனால் 10 அல்லது 12 திர்ப்புகள் எங்களுக்கெதிராக கொடுக்கப்பட்டதை எப்படி விட முடியும் என்று வாட்மோர் தெரிவித்தார்.
நடுவரின் மோசமான தீர்ப்புகளே கால்லே டெஸ்ட் தோல்விக்கு காரணம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.