பளை, மாசார் பகுதியில் உள்ள தென்னந் தோட்டமொன்றிலிருந்து இளைஞர் ஒருவருடைய சடலம் ஒன்றைப் பளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
தென்னந் தோட்டத்திற்கு மாடு மேய்க்கச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்று மாலை 5 மணியளவில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சடலம் அண்மையில் அப்பகுதியில் காணாமல் போன இளைஞருடையதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுவதோடு, சடலம் 30 வயது மதிக்கத்தக்கவருடையது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணகைளை பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.