C நிரலாக்க மொழி – மாறிலிகள்(constants)

இங்கு புரோக்கிராமினை செயலாக்கும் போது மாறாது நிலைத்த பெறுமாணங்களை கொண்டு காணப்படுவன மாறிலிகள்(constants) எனப்படும்.

மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறான மாறிலிகளை இம்மொழியில் நாம் காண முடியும்.

Integer
எண் தொடரினால் உருவாக்கப்படும் மாறிலியாகும்.இது பிரதானமாகமூன்று வகையாக நோக்கப்படும்.

  • Decimal integer

இது ஓர் தொடர்(set) எண்களை கொண்டமைந்தது. பூச்சியம் தொடக்கம் ஒன்பது வரையான எண்கள் இதனுள் அடங்கும்.

கமா(comma) குறியீடு,வெற்று இடைவெளிகள்(embedded spaces),அடையாள குறிகள்(non-digit character) என்பன இவ்வெண்களின் இடையேயோ ஆரம்பத்திலோ முடிவிலோ காணப்படக்கூடாது.

  • octal integer
  • hexa decimal integer

Real Constant

தொடர்ந்து மாறும் கொள்ளளவுகளை குறிக்க integer எண்கள் போதுமானதாக இருப்பதில்லை.இதனை குறிப்பதற்கு இம்மாறிலி பயன்படுத்தப்படும்.இது கூடுதலாக தசம எண்களாகவோ பகுதிப்பின்ன பகுதி கொண்டதாகவோ காணப்படும்.இது நேர் எண்களாகவோ எதிர் எண்களாகவோ தசம எண்களாகவோ அமையலாம்.

Single Character

தனி மாறிலிகள் தனியான  quotes இனுள் உள்ளடக்கப்படும்.இவ்வாறு உள்ளடக்கப்படும் digit ஆனது அவ்வெழுத்துக்குரிய உண்மைப்பெறுமானத்தை தருவதில்லை. அதாவது ‘5’ என்பது எண் 5 என்பதனை குறிப்பதில்லை.

String Constant

double quotes இனுள் உள்ளடக்கப்பட்ட எழுத்துக்களின் தொடர் string constant எனப்படும்.உதாரணமாக பின்வருமாறு அமையும்.

“welcome”



By thanaa

One thought on “C நிரலாக்க மொழி – மாறிலிகள்(constants)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *