‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’ படங்களை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படம் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. எஸ்கேப் ஆர்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் மதன், பசங்க புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. விமல், சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கின்றனர். ஹீரோயின் முடிவாகவில்லை. முக்கிய வேடங்களில் தம்பி ராமையா, சூரி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, விஜய். படம் பற்றி பாண்டிராஜ் கூறும்போது, ‘எனது முந்தைய படங்களில் இருந்து இந்தப்படம் வித்தியாசப்படும். காதலுக்கும், காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது. அடுத்த மாதம் திருச்சியில் ஷூட்டிங் தொடங்குகிறது’ என்றார்.