இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20-20 ஆட்டத்தில் விளையாடுகிறது. இதில் பங்கேற்கும் இந்தியஅணி வீரர்கள் தேர்வு வருகிற 4ந் தேதி நடக்கிறது. இந்நிலையில் சமீப காலமாக அணிக்கு தேர்வு செய்யப்படாமல் உள்ள ஹர்பஜன்சிங் இலங்கை தொடரில் தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அதேவேளையில் ஆல்ரவுண்டர் ஜடேஜா நீக்கப்படக்கூடும் என தெரிகிறது.
ரெய்னா, ரோகித்சர்மா ஆகியோரை கொண்டு சுழற்பந்துவீச்சை சமாளித்து கொள்ளலாம் என கருதப்படுகிறது. சேவாக் மீண்டும் அணிக்கு திரும்புகிறார். ஹர்பஜனுடன் ராகுல்சர்மா, ஓஜா ஆகியோரும் தேர்வாகின்றனர். சச்சின் இந்த தொடரில் விளையாடுவாரா என்பது சந்தேகமாக உள்ளது. அவர் ஆடாத பட்சத்தில் ரகானேவுக்கு சான்ஸ் கிடைக்கும். வேகப்பந்து வீச்சில் தின்டாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என தெரிகிறது.