டெங்கு ஒழிப்பு மாதத்துடன் இணைந்த தாக நாடு பூராவும் உள்ள 9 ஆயிரம் அரசாங்க பாடசாலைகளில் நேற்று டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
டெங்கு நோய் தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த ஜுன் 25ஆம் திகதி முதல் ஜூலை 24 ஆம் திகதி வரை டெங்கு ஒழிப் புவாரம் நாடு பூராவும் பிரகடனப்படுத் தப்பட்டுள்ளது. சுகாதார கல்வி, பாதுகாப்பு, சூழல், இடர்முகாமைத்துவம், பொது நிர் வாகம், மாகாண சபை உள்ளூராட்சி, நகர அபிவிருத்தி, வீடமைப்பு நிர்மாணத்துறை, ஊடகம் ஆகிய அமைச்சுக்கள் இணைந்து இந்த திட்டத்தை செயற்படுத்துகின்றன.
இதன் படி கல்வி அமைச்சினூடாக நாடு பூராவும் உள்ள சகல பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் மாகாண, மாவட்ட மற்றும் கோட்ட கல்விப் பணிப்பாளர்களுக்கு சுற்றுநிருபம் அனுப்பப்பட்டது. இது தொடர்பான ஆரம்ப வைபவம் நேற்று கல்வி அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது. சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிரிசேன, கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன உட்பட பலரும் இதில் பங்கேற்றனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால சிரிசேன, நாடுபூராகவும் உள்ள சகல பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு தினமாக இன்று பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களை பாதுகாக்கவும், சூழலை சுத்தம் செய்யவும் வேண்டிய தேவை உள்ளது. டெங்கு நுளம்பின் காரணமாக பல பாடசாலை மாணவர்களை இழக்க நேரிட்டது. இதற்கு முன் பல தடவைகள் டெங்கு ஒழிப்பு வாரம் அறிவிக்கப்பட்டா லும் காலநிலை மாற்றத்துடன் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. தனக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயற்பட்டால் டெங்கு பரவுவதை தடுக்க முடியும்.