யாழ். குடாநாட்டில் சீரற்ற முறையில் மின்சார விநியோகம் நடை பெறுவதனால் இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாக அறிவிக்க ப்படுகிறது. மின்சார விநியோகத்தை கட்டுப்படுத்துவதற்காக இல ங்கை மின்சார சபை ஒரு நாளில் சில மணித்தியாலங்களுக்கு மின் வெட்டை அமுலாக்குவதை நாம் குறைகூற முடியாது.

நாட்டில் தற்போது நிலவி வரும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் மின்சார நிலையங்களின் சேவை முழுமையாக செயல் இழக்கக்கூ டிய நிலையில் இன்று இருக்கின்றது. அடுத்த மூன்று மாத காலத்தி ற்கு இந்த வரட்சி நிலை நீடிக்கும் என்று வானிலை அவதான நிலை யம் அறிவித்தும் இருக்கிறது. இதனால் நாடெங்கிலும் மின்சார துண் டிப்பு அமுலாக்கப்படலாம் என்ற அச்சம் தோன்றியிருக்கிறது.

இன்னும் 2 வாரங்களுக்கு தொடர்ந்து வரட்சி நிலவினால் நிச்சயமாக மின்வெட்டு இடம்பெறுவதை எவரும் தடுத்துவிட முடியாது.

யாழ்ப்பாணத்திற்கு இலங்கையின் மின் உற்பத்தி வலையமைப்பில் இரு ந்து மின்சார விநியோகம் கொடுக்கப்படுவதில்லை. அங்கு அனல் மின் சார நிலையங்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரமே பகிர்ந்தளிக்கப் படுகின்றது. அனல் மின்சார நிலையங்களில் மூல மின்சாரத்தை உற் பத்தி செய்வதற்கு பெருமளவு பணம் விரயமாகின்றது என்ற கார ணத்திற்காக வடபகுதியில் உள்ள மின்சார சபையின் முக்கியஸ்தர் கள் மின்சாரத்தை முன் அறிவித்தல் எதுவுமின்றி திடீர் திடீரென்று வெட்டிவிடுவதனால் மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கியு ள்ளார்கள்.

தாங்கள் மின்சார கட்டணத்தை செலுத்த தயாராக இருக்கும் போது நீங் கள் ஏன் இவ்விதம் நியாயமற்ற முறையில் மின்சாரத்தை வெட்டு கிaர்கள் என்று பொதுமக்கள் கேட்கும் போது, அதற்கு அவர்கள் உண்மைக்கு மாறான பதில்களை அளித்து வருகிறார்கள் என்றும் பொதுமக்கள் முறையிடுகிறார்கள். வீதிகளை திருத்தி அமைக்கும் பணி இடம்பெறும் போது நாம் பகல் பொழுதில் பாதுகாப்பு செயற் பாடாக மின்சாரத்தை துண்டித்து விடுகிறோம் போன்ற பலதரப்பட்ட காரணங்களை முன்வைக்கிறார்கள் என்றாலும் எரிபொருளுக்கான மித மிஞ்சிய செலவை குறைக்கும் எண்ணத்துடன் தான் இவ்விதம் செய் கிறார்கள் என்ற உண்மை இப்போது ஆதாரபூர்வமாக வெளியாகி யுள்ளது.

இவ்விதம் ஓரிரு மணித்தியாலங்களுக்கு ஒரு தடவையும் ஒரு மணித் தியாலத்தில் இரண்டு மூன்று தடவைகள் மின்சாரம் துண்டிக்கப்படுவ தனால் மின்சார சாதனங்களான வானொலிப்பெட்டி, தொலைக்காட் சிப்பெட்டி, குளிர்சாதனப் பெட்டி மற்றும் மின்விளக்குகள் சேதமடை கின்றன என்றும் மக்கள் அங்கலாய்க்கிறார்கள்.

இந்த நிலையை மாற்றி மக்களின் துயரை துடைக்க வேண்டுமாயின் இலங்கை மின்சார சபை முன்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவி த்து இந்த இந்த நேரங்களில் மின்சார துண்டிப்பு நடைமுறைப்படுத் தப்படும் என்று அறிவிப்பது அவசியமாகும்.

இவ்விதம் மக்களின் பூரண ஒத்துழைப்புடனும், அங்கீகாரத்துடனும் மின் சார துண்டிப்பை மின்சார சபை நடைமுறைப்படுத்துவது பொதுமக்க ளுக்கு செளகரியமாக இருக்கும்.

இந்த மின்சார துண்டிப்பு வடபகுதியில் உள்ள மாணவ, மாணவிகளின் கல்விக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே நாளாந்தம் வீட்டுப் பாடங்களை செய்கி றார்கள். அந்த பழக்கத்திற்கு தீங்கிழைக்கக்கூடிய வகையில் மின் வெட்டை அமுலாக்குவது தவறு. வடபகுதியில் உள்ள மின்சார அதி காரிகள் இப்படியான மின்வெட்டுகளை அமுலாக்குவதற்கு முன்னர் பொதுமக்களுடன் குறிப்பாக சமூகத் தலைவர்களுடனும், மதத் தலை வர்களுடனும் கூடிப் பேசி அவர்களுக்கு முன் அறிவித்தல் செய் தால் மின்சாரத்தினால் இயங்கும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் பழுதடைவதை குறைப்பதுடன் மக்களின் நாளாந்த வாழ்க்கையும் மின்வெட்டினால் பாதிக்கப்படுவதை தவிர்த்துவிடலாம்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க மின் சாரத்தை மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென்று கேட்டி ருப்பதை நாம் மனப்பூர்வமாக ஆதரிக்கிறோம். ஒரு நாட்டின் பொரு ளாதாரம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக அனல் மின்சார நிலை யங்களை பயன்படுத்துவதனால் பலவீனமடைந்து விடும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்வது அவசியமாகும். இன்று எரி பொருள் நாடெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான வாகனங்களை பயன்படுத்துவதற்காகவும் அனல் மின்சார நிலையங்களை இயக்கு வதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.

ஒரு நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்து வரும் போது அந்நாட்டில் கைத்தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளை தங்கு தடையின்றி மேற்கொள்வது அவசியம் தான். ஆயினும் மின்சாரத்திற்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சில மாத ங்களில் மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில் மின்சார சபையினரும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

யுத்தம் முடிவடைந்து நாடு அபிவிருத்தி அடைந்துவரும் இவ்வேளை யில் குறிப்பாக வடபகுதியில் புதிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வந்து தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு ஆர்வம் காட்டும் இவ் வேளையில் மின்சார சபை இவ்விதம் மின்துண்டிப்புகளை அமுலா க்குவதற்கு பதில் மின்சார கட்டணத்தை உயர்த்தியாவது மின்வெ ட்டை ஏற்படுத்துவதை தவிர்ப்பது அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *