பீஜிங்:சீனாவின் பீஜிங்:சீனாவின் “ஷென்சு-9′ விண்கலம், இரண்டு வார கால பயணத்துக்குப் பின், நேற்று பூமிக்குத் திரும்பியது.விண்வெளியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் இணைந்து, விண்ணில் ஆய்வுக் கூடத்தை அமைத்துள்ளன.
இதற்குப் போட்டியாக, சீனாவும் விண்ணில் ஆய்வு மையத்தை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. வரும், 2020க்குள், இந்த பணிகளை முடிக்க, சீனா திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வு மையத்துக்கு, “டியான்காங்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.ஆய்வு மையம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காக, “ஷென்சு-9′ என்ற விண்கலத்தை, சீனா, கடந்த 17ம் தேதி விண்ணில் செலுத்தியது. இதில் முதன் முறையாக, விண்வெளி வீரர்களுடன், லியூ யாங்,34, என்ற விமான பெண் பைலட்டும் சென்றார்.
இவர்கள் விண்ணில், 13 நாட்கள் தங்கியிருந்து, பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு விட்டு, நேற்று பூமிக்கு திரும்பினர்.மங்கோலியாவின் சிசிவாங் பகுதியில், “ஷென்சு-9′ விண்கலத்தின் கேப்சூல் பாரசூட் மூலம் தரையிறங்கியது. விண்கலம் பூமிக்கு இறங்குவதை, சீன பிரதமர் வென் ஜியாபோ, கட்டுப்பாட்டு அறையிலிருந்து பார்த்து கொண்டிருந்தார். கடுமையான வெப்பத்துடன் காணப்பட்ட, ஷென்சு விண்கல கேப்சூல் பூமிக்கு, 10 கி.மீ., உயரத்தில் இருக்கும் போது, பாரசூட் விரிக்கப்பட்டது. பின், அது தரையை வந்தடைய ஒரு மணி நேரமானது. கேப்சூல் தரையை தொட்டதும், அங்கு கூடியிருந்த விஞ்ஞானிகளும், பாதுகாவலர்களும், அதிகாரிகளும், மூன்று விண்வெளி வீரர்களுக்கு வாழ்த்து கூறினர்.
விண்கலம், இரண்டு வார கால பயணத்துக்குப் பின், நேற்று பூமிக்குத் திரும்பியது.விண்வெளியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் இணைந்து, விண்ணில் ஆய்வுக் கூடத்தை அமைத்துள்ளன.