கடந்த வருடம் ஐரோப்பிய வலய நாடுகளில் அதிகமானோருக்கு தஞ்சம் வழங்கிய நாடாகப் பிரித்தானியா விளங்குகின்றது.
2011ல் பிரித்தானியாவில் 14360 பேருக்கும், 13045 பேருக்கும், பிரான்சில் 10740 பேருக்கும், சுவீடனில் 10625 பேருக்கும், நெதர்லாந்தில்8380 பேருக்கும், இத்தாலியில் 7485 பேருக்கும் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
2008ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து மூன்று வருடமாக இத்தொகை அதிகரித்துள்ளது. இது 41 சதவீத அதிகரிப்பாகும்.
அதிக தஞ்சம் கோருவோரை நாட்டிற்குள் அனுமதித்ததில் பிரிட்டனுக்கு முதலிடம் கிடைத்துள்ள நிலையில் இவ்விடயத்தில் பிரிட்டன் நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடித்ததாகவும் குறை கூறப்படுகிறது.
இதேநேரம் பிரிட்டனில் தஞ்சம் கோரிய மூன்றிலொரு பகுதியினருக்கு அவர்களின் எகோரிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸில் இது ஏழு பேருக்கு ஒருவராகவும் ஜோ்மனியில் இது ஐந்து பேருக்கு ஒன்றாகவும் காணப்படுகிறது.
பிரிட்டனில் 2011ல் ஈரானிய அகதிகள் 1985 பேருக்கும், இலங்கையர்கள் 1160 பேருக்கும், ஆப்கானிஸ்தானியர்கள் 1020 பேருக்கும் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் 2008ம் ஆண்டு தஞ்சம் வழங்கப்பட்டோரின் தொகை 10200 ஆகும்.
கடந்த வருடம் பிரிட்டிஷ் குடிவரவு அதிகாரிகளிடம் காணப்பட்ட குழறுபடிகள் காரணமாக தஞ்சம் கோரிய ஒரு லட்சம் பேர் காணாமல் போயுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
தஞ்சம் கோரியோர் நன்கு பராமரிக்கப்படுவதாலும் அவர்கள் உலகின் எப்பகுதியிலிருந்து வந்தாலும் நாங்கள் பேசும் ஆங்கிலமொழியை அவர்களும் தமது இரண்டாவது மொழியாக பேசுபவராக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் பிரிட்டனுக்குள் நுழைந்தவர்களில் மிகக் குறைந்த தொகையினருக்கே தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.