தேடல் உலகின் ஜாம்பவான் கூகுள் சமீப காலமாக ஓர் அரிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது – டிரைவர் இல்லாமல் நவீன தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ரோபோட் கார்!கடந்த மே மாதம் அமெரிக்காவில், கூகுள் ரோபோட் காருக்கான லைசென்ஸ் பெற்று, உலகின் முதல் ரோபோட் கார் என்ற பெருமையைப் பெற்றது.
இந்த கார் Google Street View தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காரில் பொருத்தப்பட்டுள்ள கேமரா, ராடார் சென்சார் உதவியுடன் தனிப்பட்ட சாப்ட்வேர் மூலம் இயங்குகிறது! இதில் நீங்கள் எந்த ஒரு பட்டனைக்கூட தொட வேண்டியதில்லை. ஏறும் இடம் முதல் இறங்கும் இடம் வரை வேடிக்கை பார்ப்பது மட்டுமே உங்கள் வேலை. மற்ற எல்லாவற்றையும் சாப்ட்வேர் பார்த்துக்கொள்ளும்.
தற்போது வணிக முறையில் வரவில்லை என்றாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வணிக
முறையில் நமக்கு கிடைத்துவிடும்!