Published On: Sat, Mar 10th, 2012
சுவாரஸ்யம் / தொழில்நுட்பம் | By admin
நம்புறீங்களா? 15 வருடங்களுக்கு மேல் சார்ச் நிலைத்திருக்கும் மொபைல் போன்

மொபைல் போன் வைத்திருக்கும் நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சினை சார்ச் தான். போனை பாவிக்காமல் வைத்திருந்தாலும் ஓரிரு நாட்களில் பற்றரி சார்ச் தீர்ந்துவிடும். சுவிச் ஓஃப் நிலையில் வைத்திருந்தாலும் இதே நிலைதான்.

இப் பிரச்சினைக்கு தீர்வு வந்துள்ளது.

XPAL Power நிறுவனம் தயாரித்திருக்கும் SpareOne என்ற பெயர் கொண்ட மொபைல் போனை ஒருமுறை சார்ச் பண்ணிவிட்டால், சுமார் 15 வருடங்களுக்கு மேலாக சார்ச் தீராது இருக்கும்.இத் தொலைபேசியில் 10 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பேசமுடியும். போனை பாவிக்காது வைத்தால் அதன் சார்ச் 15 வருடங்களுக்கு அப்படியே இருக்கும்.

இத் தொலைபேசி தயாரிக்கப்பட்டதன் நோக்கம், அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்காகும்.

ஒருமுறை சார்ச் செய்து, சுவிச் ஓஃப் பன்ணி கைப்பையில் வைத்துவிட்டால் போதும், அவசர தேவைகளின் போது பயன்படுத்தலாம்.

இக் கைபேசியின் விலை வெறும் 50 டொலர்கள் என்பது மேலும் இனிப்பான செய்தி. இவ் வருட இறுதியில் சந்தைக்கு வர இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *