நவீனமயப்படுத்தப்பட்ட நாவலப்பிட்டி ஜயத்திலக்க விளையாட்டு மைதானத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் திறந்து வைத்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பிரதியமைச்சர் காதர் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது நாவலப்பிட்டி நகரசபையின் புதிய கட்டிடத்தினையும் ஜனாதிபதி திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.