உன்னுடைய இனிய
தொலைபேசி தொடர்பை
துண்டித்து விட்டேன்
துடித்தது என் இதயம்
துயரம் தாங்காமல்
… விடிய விடிய பேச
எனக்கும் ஆசைதான்
விடிந்தபின் பேசவும்
ஆசையாகதான் உள்ளது
என்ன நான் செய்ய
விடியுமா நம் வாழ்வு
இப்படியே தொடர்ந்தால்
இதயத்தை கல்லாக்கவில்லை
மாறாக அது இன்று
இரத்த கண்ணீரை
உள்ளே வடிக்கிறது
வாய்திறந்து பேசவில்லை
வலிதாங்க முடியவில்லை
உடனே துண்டிகிறேன்
ஊமையாய் செல்கிறேன்
ஊயிரே மன்னித்துவிடு
