இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவுற்றுள்ளது.
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்இழப்பிற்கு 551 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.
போட்டியின் இறுதிநாளான இன்று புதன்கிழமை, இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 391 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.அதையடுத்து பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 102 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்தக்கொண்டது.
வெற்றி பெறுவதற்கு மேலும் 221 ஓட்டங்கள் தேவையான நிலையில் இலங்கை அணி இன்று மாலை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. எனினும் அவ்வணி 2 விக்கெட் இழப்பிற்கு 86 ஓட்டங்களைப் பெற்றநிலையில் இப்போட்டி முடிவுக்கு வந்தது.
இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக பாகிஸ்தான் வீரர் ஜுனைத் கான் தெரிவானார்.
யாழிலிந்து
கிருசோபன்
