உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் திருத் தங்களுடன் வேறொரு தினத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிரிபால டி. சில்வா நேற்று சபையில் அறிவித்தார்.
உள்ளூராட்சித் தேர்தல் திருத்த சட்டமூலம் பிறிதொரு தினத்துக்கு மாற்றம்
முழுமையான திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்படும்
கே. அசோக்குமார், எம். எஸ். பாஹிம்
உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் திருத் தங்களுடன் வேறொரு தினத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிரிபால டி. சில்வா நேற்று சபையில் அறிவித்தார்.
உள்ளூர் அதிகார சபைகள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல் (திருத்தச்) சட்டமூலம் என்பன விவாதத்திற்கு எடுப்பதற்காக ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
தினப்பணிகள் தொடர்பில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவிப்பு விடுத்ததையடுத்து மேற்படி இரு திருத்தச் சட்ட மூலங்களை இன்று (17) விவாதத்திற்கு எடுக்கப்பட மாட்டாது என மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ. எல்.எம். அதாவுல்லா அறிவித்தார்.
இதற்கான காரணம் என்ன என எதிர்தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா,
உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக சஜித் பிரேமதாஸ எம். பி. தேர்தல் ஆணையாளர் அடங்களான பலர் திருத்தங்கள் சமர்ப்பித்துள்ளனர். அவை குறித்தும் கவனம் செலுத்தி சகலரும் ஏற்கக் கூடிய திருத்தச் சட்ட மூலம் வேறொரு தினத்தில் சபையில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
இதே வேளை, ஐ. தே. க. பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று இரு திருத்தங்களை பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு சமர்ப்பித்தார். வேட்பு மனு தயாரிக்கும் போது மொத்த வேட்பாளர் தொகையில் 25 வீதம் பெண்களுக்கும் 25 வீதம் இளைஞர்களுக்கும் ஒதுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.