மாற்றுத் திறனாளிகளின் ‘மெல்ல கற்றல்’ 100 வது ஆண்டு நிகழ்வுகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை தேசிய கல்வியற் கல்லூரியில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளதாக காசநோய் வைத்திய நிபுணர் சி. யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி யோகநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ‘நில்லாத காலத்தில் கல்லாத கல்வி கல்லான கல்வி எனும் தொனிப்பொருளில் காசநோய் வைத்திய நிபுணர் சி.யமுனானந்தா சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.
இந்நிகழ்வில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.