ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமனம் வழங்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் கல்வியற்கல்லூரி ஆசியரியர்களுடனான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை யாழ். மகளிர் இந்து கல்லூரியில் நடைபெற்றுள்ளது.

வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வடமாகாண அளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், பிரதிச் செயலாளர் விக்னேஸ்வரன், அளுநரின் செயலாளர் இளங்கோவன் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் வட மாகாணத்திற்கு நியமனம் வழங்கப்பட்ட 58 தொழில்நுட்ப ஆசிரியர்களும் 190 கல்வியற் கல்லூரி பட்டதாரி ஆசிரியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *