சிம்பு, தனுஷ் படங்களுக்கு பிறகு தமிழில் நடிக்காதது ஏன்?’ என்பதற்கு பதில் அளித்தார் ரிச்சா கங்கோபாத்யாய். இதுபற்றி அவர் கூறியதாவது: மயக்கம் என்ன, ஒஸ்தி படம் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது அதை ஏற்க முடியாத சூழலில் இருந்தேன். இதை புரிந்துகொண்ட வெங்கட்பிரபு வேறு படத்தில் இணைந்து பணியாற்றலாம் என்றார். இதற்கிடையில் வேறு மொழிகளில் பிஸியாகி விட்டதால் தமிழ் படங்களை ஏற்க முடியாமல் போனது. சமீபத்தில் ‘பிரியாணி’ என்ற படத்தில் நடிக்க கேட்டார் வெங்கட்பிரபு. அந்த வாய்ப்பை இழக்க இஷ்டமில்லை. உடனடியாக ஒப்புக்கொண்டேன். வழக்கமாக வெங்கட்பிரபு படம் என்றால் நடிகர்களுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்படத்தில் ஹீரோயின் வேடத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது. இம்மாத இறுதியில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இளம் நடிகர்கள் திறமை மிக்கவர்களாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் கார்த்தி முதலிடத்தில் இருக்கிறார். அவருடன் ‘பிரியாணி’ படத்தில் இணைவது சந்தோஷம். அதேபோல் சூர்யாவுடன் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. இப்படத்துக்காக என் உடல் எடையை குறைத்திருக்கிறேன்.
