ஸ்விட்சர்லாந்தில் உள்ள சேர்ன் ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள், அணுவை விட சிறிய புதிய துகள் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
இந்தத் துகள் தாங்கள் பல தசாப்தங்களாகத் தேடிக்கொண்டிருக்கும் ஹிக்ஸ் போஸோன் என்ற விஷயத்தின் தன்மையை ஒத்திருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஹிக்ஸ் போஸோன் அணுக்களுக்கு அவைகளின் நிறையைத் தருவதாகக் கருதப்படுகிறது.
இந்த முடிவுகள் பூர்வாங்க முடிவுகள் தான். ஆனால் இவை மிகவும் பலமான , திடமான முடிவுகள் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
கடந்த டிசம்பரில், சேர்ன் மையத்தின் பெரும் ஹேட்ரான் கோலைடர் என்ற ஆய்வுக்கூடத்தின் ஆராய்ச்சியாளர்கள், தாங்கள் இந்த அணுவை விட சிறிய துகள் இருப்பதைக் கோடிகாட்டும் சிறிய சமிக்ஞைகளைக் கண்டுபிடித்ததாகக் கூறினர்.
ஹிக்ஸ் போஸோன் இருக்கிறது என்பதைக் காட்டும் நிரூபணம் கிடைப்பது, பொளதிகத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
