தொலைதூரத்திலிருந்து வீட்டிலுள்ள உபகரணங்களை கட்டுப்படுத்தக் கூடியதான தன்னியங்கி இலத்திரனியல் சுற்றொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வவுனியா காளிகோவில் வீதியில் அமைந்துள்ள SUNTEC (Sun Technical Engineering College) நடத்திவருபவருமான ,மென்பொருள் பொறியியலாளருமான தங்கராஜா ஷத்விதன் என்பவரே கண்டுபிடித்துள்ளார்.
நிறுவனத்தினால் நாடாத்தப்பட்ட கண்காட்சியின் போது தொலை தூரத்தில் இயங்கக் கூடியதும், சுயமாக செயற்படக் கூடியதும், அத்துடன் கட்டுப்படுத்தக் கூடியதுமான (Robot Technoloy) உபகரணமும் அத்துடன் புதிய இலத்திரனியல் சுற்றை(Circuit) உருவாக்கி அதனை கணினியில் இணைந்து அதற்கான மென் பொருள் நிகழ்ச்சி நிரலையும் உருவாக்கி ( Soft ware and driver) அதனூடாக வீட்டு மின் சுற்றுக்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை கட்டுப் படுத்துவதற்கான தொகையிடும் சுற்றுக்களை ( Integrated Circuit) உருவாக்கி காட்ச்சிப் படுத்தியுள்ளார். இதனுடன் வர்த்தக நிறுவனங்களுக்கு பயன்படும் மென்பொருட்கள், இணையம், மல்டி மீடியா வடிவமைப்புக்களும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தன.
இந்த வீட்டு மின் சுற்றானது தொலை தூரத்திலிருந்து இணையத்தினூடு வீட்டில் நடைபெறுவதை அவதானிப்பதுடன்,மின்னினைப்புக்களை ஏற்படுத்தவும் முடியும். அத்தோடு இது முழுமையாக இலகுவாகவும், மலிவாகவும் கிடைக்கக்கூடிய இலத்திரனியல் பொருட்களைக் கொண்டு எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்றவகையிலும் எல்லோராலும் இத் தொழில் நுட்பத்தினை பெறக்கூடியதாக அமையும் எனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கணினியின் Mother board , Processor இனை பயன்படுத்தி அவற்றுடன் பொருத்தக் கூடிய தொகையிடும் சுற்றினை ( Integrated Circuit) உருவாக்கி அதனை இணைத்து மென்பொருள் ஒன்றினால் செயற்படுத்தக் கூடிய தன்னியக்கி செயற்பாட்டினையும் (Shelf Brain)அத்தோடு இயக்குனர் (Operator) மூலம் இயக்கக் கூடிய வசதியும், கொண்ட றோபோ தொழில் நுட்பத்தினை உருவாக்கியுள்ளேன் என்றும், இது அதி கூடிய தகவல் பரிமாற்றத்தினை வேகமாக செயற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது அத்தோடு வீடியோ தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி செயற்பாடு கொண்டது.
இதற்கு ஒரு குறிப்பிட்ட தூரத்தின் முன் ஒரு பொருளோ அல்லது உருவமோ தென்படுமாயின் சமிக்கைகளை அனுப்பிக்கொண்டே இருக்கும். அதுமட்டும் அல்லாமல் அதன் தூரத்தின் அளவில் தனது செயற்பாட்டின் வேகத்தினை கட்டுப்படுத்தவள்ளது எனவும், இது குறுந்தூரம், நெடுந்தூரம் செல்லக் கூடியதாகவும் இதனூடாக எதிர்காலத்தில் நிலத்திலிருக்கும் கண்ணிவெடிகள் மற்றும் அவதானிப்புக்களும் தூரத்திலிருந்து இடம்பெறும் செயற்பாடுகளை அவதானிப்பதற்கும் பயன்படுத்த ஏதுவாக வடிவமைக்க உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் பொருட்கள் அனைத்தும் எமது நாட்டின் சந்தையில் கிடைக்கப் பெற்றவை. அத்தோடு மருத்துவ துறைக்கு பயன்படும் சில உபகரணங்களையும் தாம் வடிவமைப்பதாகவும் அவை சாதாரண வழி மூலம் இயங்க வைக்க கூடியதாக அமையும் உற்பத்திச் செலவு குறைவானதாகவும், கூடுதலான பயனாளிகள் பயன்பெறும் வகையில் அமையும் எனவும் தெரிவித்தார்.