நடிகை டாப்சிக்கும் ‘மங்காத்தா’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த பணக்கார இளைஞர் ஒருவருக்கும் லவ். ஏர்போர்டில் பிக்கப், டிராப் என்று முதன்முறையாக நாம்தான் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த கிசுகிசுவின் தொடர்ச்சிதான் இன்று போலீஸ் விசாரணை வரைக்கும் சென்று, தெலுங்கு நடிகர் மனோஜை தலை மறைவாக ஓட வைத்திருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் பிலிம்பேர் அவார்டு நிகழ்ச்சி ஏக தடபுடலாக நடக்கும். நிகழ்ச்சி முடிந்ததும் ‘சரக்கு’ பார்ட்டியும் அமர்க்களப்படும். இந்த முறை பிரபல நட்சத்திர அந்தஸ்துள்ள ‘ஹயாத்’ ஓட்டலில் விருந்தளிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். கொடுமை என்னவெனில் இங்கே ‘பார்’ லைசென்ஸ் இன்னும் வாங்கப்படவில்லையாம். அதனால் ‘சரக்கு’ கட். சிலருக்குதான் இந்த ஏமாற்றம். ஆனால் பெரிய மனிதர் ஒருவர் தனது பங்களாவில் ஒரு சிறப்பு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த பார்ட்டியில் ஏராளமான நட்சத்திரங்கள் பங்கேற்று ஜென்ம சாபல்யம் அடைந்தார்கள். அங்குதான் ‘மங்காத்தா’ புகழ் மகத்தும் சென்றிருந்தார். அதே பார்ட்டிக்கு தனது நண்பர்கள் புடைசூழ வந்திருந்தார் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜ். இருவருக்கும் டாப்ஸியை காதலிக்கிற விஷயத்தில் ஏற்கனவே தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறதாம்.
ஆறு மாசம் அவரோட இருந்தேன். ஆறு மாசம் உன்னோட இருக்கிறேன் என்று ‘கிராக் ஜாக்’ ஒப்பந்தம் போட்டாரோ, என்னவோ? மகத்தை விட்டுவிட்டு இப்போதெல்லாம் மனோஜ் பின்னால் சுற்ற ஆரம்பித்துவிட்டார் டாப்ஸி. துட்டு விஷயத்தில் அவரை விட இவர் வெயிட் என்பதும் இன்னொரு முக்கிய காரணம்.
நேரடியாக இருவரும் சந்தித்துக் கொண்ட நேரத்தில் டாப்ஸி பற்றி பேச்சு எழ, கனல் கண்ணன், அனல் அரசுகளின் ‘ஆக்ஷன் கட்’ இல்லாமல் கோதாவில் இறங்கியிருக்கிறார்கள் இருவரும். அடிப்படையாகவே ஜிம் பாடி மனோஜுக்கு. மகத்தோ மியாவ் டைப். மனோஜ் விட்ட குத்தில் மகத்தின் கண்ணோரத்தில் பலத்த சேதாரம். யார் யாரோ ஓடிவந்து விலக்கிவிட்டதில் அந்த குறைந்தபட்ச சேதாரத்தோடு தப்பியிருக்கிறார் மகத்.
சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற இடத்திலிருந்துதான் போலீசுக்கு தகவல் போனது. அப்புறம் என்ன? மனோஜ் உள்ளிட்ட மூவர் மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டு வலை வீசப்பட்டிருக்கிறது.
இதுபற்றியெல்லாம் கேட்டால், ‘ஹே… என்ன இது? ரெண்டு பேரும் என்னை லவ் பண்ணுதா… ஃபன்னி நியூஸ்’ என்று நாக்காலேயே நடைவண்டி ஓட்டுவார் டாப்ஸி.
மலரினும் மெல்லிது காமம். அதை மல்லாக்க தள்ளுது கோபம். இதுதாண்டீய்ய்ய்ய் சினிமா லவ்வு….