யாழ்ப்பாணம்.கிளினொச்சி.முல்லைத்தீவு,வவுனியா மற்றும் பல ஊர்க்களில்ஒரு காலத்தில் வனப்பகுதியாக இருந்தன. ஏரி, குளம், அடர்ந்த மரங்கள் என்றிருந்த இப்பகுதிகள் கடந்த 5 ஆண்டில் விஸ்வரூப வளர்ச்சி பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் நிலத்தின் மதிப்பு அதிகம் என்பதால் இங்கு வீடு வாங்க முடியாதவர்கள், கிளினொச்சி. வீடு கட்ட ஆரம்பித்தார்கள்.ஏரி, குளங்கள் அனைத்தும் குடியிருப்பு பகுதியாகி விட்டது. வனப்பகுதியாக இருந்த இடங்கள் எல்லாம் பெரிய பெரிய பில்டிங்காக மாறிவிட்டன. விளைவு… வனத்தில் இருந்த பாம்பு, விஷ பூச்சிகள் தங்க வேறு இடமில்லாமல் அழையா விருந்தாளிகளாக குடியிருப்புகளில் தஞ்சம் புகுவது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பொதுவாக வீட்டை சுத்தமாக வைத்திருக்கவில்லை என்றால் பூச்சி, பல்லி நுழைவது வழக்கம். இப்போது அந்த வரிசையில் பாம்புகளும் சேர்ந்திருக்கின்றன. வீடுகளில் பாம்புகள் புகுவது ரொம்பவும் சாதாரண விஷயமாகிவிட்டது. கடந்த 6 மாதத்தில் குடியிருப்புகளில் இருந்து 1,467 பாம்புகள் மீட்கப்பட்டுள்ளதாக வனத்துறை தகவல் தெரிவிக்கிறது. இதில் அதிகமாக புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில்தான் பாம்புகள் தஞ்சம் புகுகின்றன. குடியிருப்பு பகுதியில் இருந்து பிடிட்ட பாம்புகள் விஷத்தன்மை கொண்டவை அல்ல.

கட்டுவிரியன், தண்ணீர் பாம்புகள், சாரை பாம்புகள், மற்றும் மண்ணுளி பாம்புகள் தான் குடியிருப்புகளில் புகுகின்றன. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தினமும் எங்களுக்கு 50 போன்கால் வருகிறது. வீட்டில் பாம்பு புகுந்து விட்டதாக கூறி அலறுகிறார்கள்.
ஆனால் பாம்புகளை பொறுத்த வரையில் அவைகளை நாம் சீண்டி பயமுறுத்தினால் மட்டுமே கொத்த வரும். எங்கள் மீட்பு குழுவினர் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் செல்கிறார்கள். வீட்டில் பாம்பு புகுந்ததாக போன் வந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட ஏரியாவில் எங்கள் குழுவினரில் யார் இருக்கிறார்களோ அவர்களை உஷார்படுத்தி அனுப்பி வைக்கிறோம்.

பாம்புகள் வேகமாக தப்பக் கூடியவை என்பதால் சில சமயங்களில் அவற்றை பிடிக்க முடிவதில்லை. வீட்டின் சுற்றுபுறத்தில் குப்பைகளை தேக்குவது, பாம்புகள் தங்குவதற்கு மிக வசதியாக போய்விடும். அதனால் அவற்றை தவிர்க்க வேண்டும். மேலும், பாம்புகள் மழை காலங்களில் தங்க இடம் கிடைக்காமல் வீடுகளை நோக்கி தான் வரும். எனவே பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்றார். இவ்வாறு மீட்கப்படும் பாம்புகள் வேளச்சேரியில் வன விலங்குகள் நல காப்பகத்தில் சேர்க்கப்படும்.

பாம்பு கடிச்சா என்ன செய்வது

பாம்பு கடித்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி உங்களுக்கு இதோ சில டிப்ஸ்…

பாம்பு கடித்த இடத்தில் கீறக் கூடாது.

கடித்த இடத்தில் வாய் வைத்து உறிஞ்சி விஷத்தை எடுக்க முயற்சிக்க கூடாது.

கடித்த இடத்தில் ஐஸ் கட்டி வைத்து தேய்க்க கூடாது.

கடித்த இடத்தை அசையாமல் வைத்திருக்க வேண்டும்.

பாம்பு கடித்த நபரை ஒருக்களித்து படுக்க வைப்பதன் மூலம் உணவுப்பொருட்கள் மூச்சு குழாய்க்குள் போவதை தடுக்கலாம்.

பாம்பு கடித்த இடத்தை தாழ்வாக வைக்க வேண்டும். காலில் கடித்து இருந்தால் உயரமான ஸ்டூல் போட்டு காலை கீழே தொங்க விட வேண்டும்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். முதலில் விஷ முறிவு மருந்தை கொடுத்த பிறகே சிகிச்சை அளிக்க வேண்டும்.
மீரா
ஜெர்மன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *